வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பத்திரகாளி அம்பாள் ஆலய தீமிதிப்பு

255

தட்சண கையிலாயம் என போற்றப்படும் கிழக்கிலங்கை கீழ் கரையிலே வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இறுதி நாள் தீ மிதிப்பு மற்றும் தீர்த்தமாடும் உற்சவம் இன்று இடம்பெற்றது.

பத்திரகாளி அம்பாள் ஆலய பிரம்மோற்சவ பெருவிழாவானது கடந்த 27ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெள்ளிக்கிழமை தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (2) 625.0.560.320.160.600.053.800.668.160.90 (3) 625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (1) 625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2) 625.0.560.320.500.400.197.800.1280.160.95

இவ் உற்வத்தின் போது தம்ப பூசை, வசந்த மண்டப பூசை இடம்பெற்றதுடன், சுவாமி உள் வீதி வலம் வந்தார். பின்னர் தீமிதிப்பு இடம்பெற்ற போது ஐநூறுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோசத்துடன் தங்களுடைய நேர்த்தியை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் கலந்து கொண்டனர்.

இவ் மஹோற்சவத்தின் பூசைகள் யாவும் பிரம்மஸ்ரீ.நாகரட்ண ஹரிந்திரக் குருக்கள் தலைமையிலும், தீ மிதிப்பு பூசை பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையிலும் இடம்பெற்றது.

வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழாவின் அனைத்து நிகழ்வுகளுக்கும் லங்காசிறி ஊடக அனுசரணை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE