காலி பிரதேசத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தலைமறைவாகியிருந்த பஸ்ஸின் சாரதியினை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
உடுகம பஸ் டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி காலியிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டு விபத்திற்குள்ளாகியதில் கர்ப்பணித்தாயார் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்றிரவு 8.45 இடம்பெற்றுள்ளது.
விபத்தினை ஏற்படுத்தியிருந்த பஸ்ஸின் சாரதி தப்பிச்சென்றிருந்த நிலையில் அவரை கைது செய்துள்ள பொலிஸார், காலி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கையெடுத்து வருகின்றனர்.