நானுஓயா அவோகா தோட்டத்தில் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 08 சந்தேகநபர்களில் எழுவரை, நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று விடுதலை செய்ததுடன், ஒருவருக்கு 10 வருடச் சிறைத்தண்டனையை விதித்துஉத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் தெரியவருவதாவது,
கிளரன்டன் அவோகா தோட்டத்தில் 12.10.2000 அன்று, மரக்குற்றிகளை திருட்டில் 8 பேர் அடங்கிய குழு ஒன்று ஈடுபட்டுள்ளது. இதனைத் தடுக்க முயன்ற காவலாளி பன்னீர்ச்செல்வம் என்பவரை அந்தக் குழு தாக்கியுள்ளது. தாக்குதலில் பலத்த காயமடைந்த பன்னீர்ச்செல்வம் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களான 8 பேர் நானுஓயாப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.
3 மாதகால விளக்கமறியலின் பின்னர் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து 16 வருட காலம் இடம்பெற்றுவந்த வழக்கில் பிரதான குற்றவாளியாக இனங்காணப்பட்ட ராமன் பாஸ்கரன் (48) என்பவருக்கு 10 வருடகாலச் சிறைத்தண்டனை வழங்கி நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்கவினால் தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றவாளி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் சிவில் கிராமப் பாதுகாப்பு உத்தியோகத்தராகக் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்ததக்கது.