அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று காலை உட்துறை, சட்ட உதவி மையத்தில் இடம்பெற்றது.

253

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் கடந்த 2006-08-04 அன்று அரச சார்பற்ற நிறுவனமான அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட 17 பணியாளர்களையும் நினைவுகூறும் நிகழ்வு இன்று காலை உட்துறை, சட்ட உதவி மையத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு பிரான்ஸ் நாட்டின் அக்சன் பெய்ம் (ACTION FAIM) நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் வேனிக்அன்றே தலைமையில் நடைபெற்றது.

இதன்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சகோதரர்கள், மற்றும் சிவில் சமூகத்தினர் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

SHARE