மஹிந்தவின் மைத்துனர் ரணிலின் நண்பரா? மீண்டும் மைத்திரியின் குறி ரணில் மீதோ?

210

images

தற்போதைய அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் குறித்தும் அவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனரான திருக்குமார் நடேசன் நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டமை பரபரப்பாக பேசப்பட்டதோடு, அனைவரும் அறிந்த விடயமே.

திருக்குமார் நடேசனின் கைது சம்பவத்தை தொடர்ந்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அத்துடன், மத்திய வங்கியின் திறைசேரி பிணை முறிப்பத்திரம் தொடர்பான அறிக்கைகளை கோப் குழு வழங்கிய பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதில் ஒரு பிரச்சினை உள்ளது. முதலில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் ரணிலின் நெருங்கிய நண்பர். அதே போல் அர்ஜூன் மகேந்திரன் வழக்கு விசாரணைகள் தொடர்பில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்படும் என்றும், ஜனாதிபதி எடுக்கும் முடிவுகள் நல்லாட்சிக்கு பாரிய சவாலாக காணப்படும் என்றும் பல விமர்சனங்கள் எழுந்துகொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு பிரச்சினை உருவாகியுள்ளது.

நேற்று கைது செய்யப்பட்ட மஹிந்தவின் மைத்துனரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நெருங்கிய நண்பர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணிலின் நண்பர்களே இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். ஆனால் இவற்றிற்கு ஜனாதிபதி நேர்மையான முடிவுகளையே எடுத்து வருகின்றார். இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ரணிலே எனவும் அந்த தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேவேளை, ஊழலில் ஈடுப்பட்டுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் 6 அமைச்சர்கள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான செயற்பாடுகளால் தெரிந்தோ தெரியாமலோ ஜனாதிபதியின் குறி ரணில் மீது விழுகின்றதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE