இலங்கைக்கு மேலும் உதவிகளை வழங்கவுள்ளதாக ஐ.ஓ.எம் என்ற இடப்பெயர்வுக்கான சர்வதேச ஒழுங்கமைப்பு அறிவித்துள்ளது.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்பவற்றுக்கு பயிற்சிகளை வழங்குவதன் மூலம் இந்த உதவிகளை வழங்கவுள்ளதாக ஐ.ஓ.எம் குறிப்பிட்டுள்ளது.
நாடுகளுக்கு இடையிலான மனிதக் கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் வெளியுறவு அமைச்சுக்கு ஒத்துழைப்பை வழங்கவும் ஐ.ஓ.எம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த உதவிகள் குறித்த உறுதி மொழிகளை ஐ.ஓ.எம்மின் தூதுவர் வில்லியம் லெசிஸ்விங், அமைச்சர் தலதா அத்துகோரலையிடம் வழங்கியுள்ளார்.