அரசியலமைப்பு நடைமுறைக்கு வரும்வரை புலம்பெயர் தமிழர்கள் தாயகம் திரும்பமாட்டார்கள்- இரா.சம்பந்தன்

531

sampanthan_1

புதிய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் வரை புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகம்திரும்பமாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இதனை கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வணிக சம்மேளன நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்வரைகாத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் விவசாயம், கால் நடை வளர்ப்பு மீன் பிடித்துறைகள் அபிவிருத்திசெய்யப்பட வேண்டும்.

இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள எட்கா உடன்படிக்கையை எதிர்க்காமல், அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை இலங்கையர்கள் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது. அது இலங்கை மீனவர்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகின்றது.

இது தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் வணிக கழக நிகழ்வு ஒன்றில்உரையாற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE