மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழுர்முனை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
மகிழுர் பிரதான வீதியில் சென்றுகொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திவந்த தும்பங்கேணியை சேர்ந்தவரும், வீதியில் நடந்துசென்ற மகிழுர்முனையை சேர்ந்த க.பாக்கியராஜா ஆகியோருமே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.