இலங்கைத் தமிழர்களுக்கு ஐரோப்பா வாழ் தமிழ் சமூகம் உதவி

233

ஐரோப்பா வாழ் தமிழ் சமூகத்தின் சார்பில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள நரிப்புல் தோட்ட கிராம வாழ் பொதுமக்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக நிதியுதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர் தமிழர் சார்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த சுவிஸ் வாழ் செல்வத்துரை அமிர்தலிங்கம் என்பவரினால் நரிப்புல் தோட்ட கிராம அபிவிருத்திச் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்பட்ட நிகழ்வில் முதல் கட்டமாக 2016 முதல் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த 5 தாய்மார்களுக்கு தலா 10,000 ரூபாவை வழங்கி வைத்துள்ளனர்.

இதேவேளை அந்த குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை மாதந்தோறும் தலா 10,000 ரூபாவை வைப்புச்செய்யும் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் சுவிஸ் வாழ் க.துரைநாயம், கோட்டக் கல்வி பணிப்பாளர் பூ.பாலச்சந்திரன் கவிஞர் பாவாணர் அக்கரைப் பாக்கியன் மற்றும் கிராமத் தலைவர்கள் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-17 625-0-560-320-160-600-053-800-668-160-90-18 625-0-560-320-160-600-053-800-668-160-90-19 625-0-560-320-160-600-053-800-668-160-90-20

 

 

SHARE