தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தீபாவளி முற்பணத்தை தோட்ட அதிகாரி வழங்க மறுத்ததையடுத்து இன்று லிந்துலை டிலிகுற்றி தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த தோட்டத்தில் சுமார் இன்று மதியம் 2 மணித்தியாலயங்கள் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
ஏனைய பிரதேசத்தில் உள்ள தோட்டங்களில் தீபாவளி முற்பணம் வழங்கியிருக்கின்ற போதிலும் இத் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
தோட்ட தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள் தோட்ட காரியாலயத்திற்கு சென்று தீபாவளி முற்பணத்தை வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதன் போது தோட்ட அதிகாரியால் வழங்க வேண்டிய தீபாவளி முற்பணம் கம்பனி வங்கியில் வைப்பு செய்யவில்லை எனவும், வைப்பு செய்தால் பணத்தை 24ஆம் திகதி தருவதாக கூறியதையடுத்து, தீபாவளி பண்டிகை இன்னும் சில நாட்களே இருப்பதால் 24ஆம் திகதி இப்பணத்தை பெற்று தங்களின் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையில் இருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு தீபாவளி பண்டிகைக்காக மாதாந்ததம் தொழிலாளர்களின் சம்பளத்திலிருந்து பிடித்து சேமித்து வைத்திருக்கம் தொகையினை கூட வழங்க தோட்ட நிர்வாகம் மறுத்துள்ளதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்று தருவதாக கூறிய மலையகஅரசியல் தலைவர்கள் தம்மை ஏமாற்றியதாகவும், கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும்தொழிற்சங்க அதிகாரிகள் காட்டி கொடுத்துவிட்டனர்.
தீபாவளி முற்பணம் நேற்றைய தினம் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்ததொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே தோட்ட நிர்வாகமும், தொழிற்சங்க அதிகாரிகளும் தமக்கு தீபாவளிமுற்பணத்தினையும், ஏனைய கொடுப்பனவுகளையும் உடனடியாக பெற்று தருமாறும், அவ்வாறு தவறும் பட்சத்தில் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட போவதாக இங்குள்ள தொழிலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.