பிரபாஸ், ஆர்யா, இயக்குனர் கிரிஷ் உள்ளிட்ட சிலருடன் இணைந்து கிசுகிசுக்கப்பட்டவர் அனுஷ்கா. காதல் கிசுகிசுக்கள் ஓயாத நிலையில் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார். அது காதல் திருமணமா? குடும்பத்தார் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பாரா என்பதை ரகசியம் காத்து வருகிறார். இதேபோல் மற்றொரு ரகசியத்தையும் கடந்த 3 வருடத்துக்கும் மேலாக காத்து வருகிறார். ராஜமவுலி இயக்கும் பாகுபலி படத்தில் ஹீரோவை கட்டப்பா கதாபாத்திரம் கொலை செய்தது ஏன் என்பதை மையமாக வைத்துத்தான் பல கோடி ரூபாய் செலவில் அப்படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.
அந்த ரகசியம் என்ன என்பது பட குழுவினர் தவிர அனுஷ்காவுக்கும் ஏற்கனவே தெரியுமாம். படத்தின் முதல்பாகம் தொடங்கி 2ம் பாகம் முடிவதற்கு கிட்டதட்ட 3 வருடம் ஆகியிருக்கிறது. இதுநாள் வரை அந்த ரகசியத்தை பாதுகாத்து வந்திருக்கிறார் அனுஷ்கா. எத்தனையோ பெரிய படங்களின் கிளைமாக்ஸ், ஸ்கிரிப்ட் போன்றவை பட ரிலீஸுக்கு முன்பே லீக் ஆகியிருக்கிறது. பாகுபலி கிளைமாக்ஸ் ரகசியம் இதுவரை லீக் ஆகாமல் இருப்பதற்கான காரணம் குறித்து அனுஷ்கா கூறும்போது, ‘இயக்குனர் ராஜமவுலியின் பட குழுவினர் மிகவும் நேர்மையானவர்கள்.
அந்த நேர்மைதான் இத்தனை வருடங்கள் ஆகியும் படத்தின் கிளைமாக்ஸ் ரகசியத்தை இதுவரை பாதுகாத்து வைத்திருக்கிறது. அதேபோல் படத்தில் நடித்த நட்சத்திரங்களும் நேர்மையாக இருப்பதால்தான் பட சம்பந்தமான ரகசியங்கள் எதுவும் வெளியாகவில்லை’ என்றார். படத்தின் கிளைமாக்ஸ் மட்டுமல்ல தன்னுடைய காதல் பற்றியும் இதுவரை அனுஷ்கா ரகசியம் பாதுகாத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.