சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் படம் சிங்கம்-3. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் வேகவேகமாக நடந்து வருகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இந்த தீபாவளிக்கு வரும் என முன்பு கூறினார்கள், ஆனால், தற்போது வந்த தகவலின் படி டீசர் வரவில்லையாம்.
இது சூர்யா ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தாலும், படக்குழுவினர்கள் சிங்கம்-3 மோஷன் போஸ்டர் ஒன்றை அன்றைய தினம் வெளியிடுகிறார்களாம்.