சிங்களம், முஸ்லிம், தமிழ் மோதலை நாட்டிற்கு நிர்மாணித்து நாட்டை குழப்பத்திற்கேற்படுத்தி வேற்று இனத்தவர்கள் தீவிரவாதிகள்

310

சமகால அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், அசாதாரண சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தும் வகையிலான சூழ்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார நிலையினை உறுதியற்றதாக்கும் நோக்கத்தில் சிவில் மோதல் நிலை ஒன்றினை நாட்டினுள் ஏற்படுத்துவதற்கு திட்டமிட்ட சூழ்ச்சி ஒன்று மேற்கொள்ளப்படுவதாக புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், சூழ்ச்சியினை முறியடிக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள இனவாத மற்றும் மதவாத அமைப்புகளின் தலைவர்களுடன் தொடர்புப்பட்டுள்ள முன்னாள் ஆட்சியாளர்கள் சிலர் இந்த திட்டத்திற்கு கட்டம் கட்டமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சூழ்ச்சித் திட்டத்திற்கு இங்குள்ள பிரபல வர்த்தகர்கள் சிலர் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச தொடர்பு வலையமைப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளதாக புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய தேசிய மற்றும் மத ரீதியான கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி, நாட்டில் மோதல் நிலையை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகிறது. இதன்மூலம் தற்போதைய தேசிய அரசாங்கம் எதிர்பார்க்கும் அரசியல் மற்றும் பொருளாதார புனரமைப்புகளை உடைத்து, அரசாங்கத்தை கொண்டு நடத்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இயலாதவர்கள் என மக்கள் முன் உறுதிபடுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் அதிகாரத்தை கைப்பற்ற சில தரப்பினரால் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்தின் பிரதான செயற்பாடே நாட்டை இவ்வாறு நிலையற்ற தன்மையாக்குவதாகும்.

அத்துடன் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும், அதற்கு பாரிய ஊடக பிரச்சாரம் வழங்குவதோடு அதன் ஊடாக அரசாங்கத்திற்கு நிலையற்ற தன்மையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற மத்திய வங்கி முறி சம்பவத்தின் செயற்பாடுகள் ஊடாக இது உறுதியாகியுள்ளமையினால் எதிர்வரும் நாட்களில் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் பலவற்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எப்படியிருப்பினும் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள ஊழல், மோசடி அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகள் சூழ்ச்சியாளர்களுக்கு பெரிய அளவில் சாதகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சிங்கள, முஸ்லிம் மக்களிடையே மோதலை அதிகரிப்பதற்கு சமூக உணர்வுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது எதிர்கட்சி அரசியல்வாதிகள் பலர் செயற்படுகின்றனர்.

அண்மையில் முஸ்லிம் திருமண சட்டம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு தீர்மானத்திற்கு எதிராக தவுபிக் ஜமாத் என்ற இஸ்லாம் இனவாத அமைப்பு ஊடாக எதிர்ப்பை ஏற்படுத்துவதற்கு அதற்கு பாரிய ஊடக பிரச்சாரம் ஒன்றை வழங்குவது மற்றும் அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள் பிரிவினை தூண்டிவிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.

அங்கவீனமுற்ற இராணுவத்தினரை வைத்து ஜனாதிபதி செயலகத்தை சுற்றி வளைத்தல், வடக்கில் பதற்றமான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தல், ஆகியவை இதற்கமைய மேற்கொள்ளப்பட்டதென புலனாய்வு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

விசேடமாக கடந்த ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்களை மேற்கொண்ட பொதுபல சேனா, சிங்கள ராவய, ராவண பலய, மற்றும் தற்போது உருவாகியுள்ள மேலும் பல அவ்வாறான அமைப்புகள் சிலவற்றின் ஊடாக முஸ்லிம் எதிர்ப்புகளை பாரிய அளவில் ஏற்படுத்தும் நடவடிக்கை ஒன்று வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என புலனாய்வு பிரிவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செயற்பாடுகளை மேற்கொள்வதன் ஊடாக ஒற்றுமையாக இருக்கும் முஸ்லிம் மக்களுக்குள் மோதல் நிலைமை ஏற்படுத்துவது பிரதான நோக்கமாகும்.

for img_20141207_122639_0 muslim-3

எனினும் தற்போது முஸ்லிம் மக்களுக்கு இடையில் இந்த இனவாத செயற்பாட்டிற்கு எதிராக குரல் கொடுப்பது குறித்த முயற்சியை வலுவிலக்க செய்துள்ள போதிலும் தொடர்ந்து முஸ்லிம் எதிர்ப்பை தூண்டி விடுவதன் ஒரு பகுதியாக அல்லது மோதல் நிலைமை ஏற்படுத்துவது இந்த குழுவின் முயற்சியாகும்.

எதிர்வரும் பொது தேர்தலுக்கு அண்மிக்க காலப்பகுதியில் சிங்களம், முஸ்லிம், தமிழ் மோதலை நாட்டிற்கு நிர்மாணித்து நாட்டை குழப்பத்திற்கேற்படுத்தி வேற்று இனத்தவர்கள் தீவிரவாதிகள், அவர்களை கட்டுப்படுத்த வேண்டும், சிங்கள பௌத்த தலைவருக்கு நாட்டை ஒப்படைக்க வேண்டும் என ஒரு நிலைப்பாட்டினை நிர்மாணிப்பது இங்கு இறுதிய நோக்கமாகியுள்ளதென புலனாய்வு பிரிவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

SHARE