முலையில் சுடு!” – இலங்கை போர் குற்றம் – மேலும் வீடியோ

666

இலங்கை அரசின் போர்குற்றங்கள் பற்றிய மேலும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட, கைது செய்யப்பட்ட சிவிலியன்களை மோசமாக படுகொலை செய்வது குறித்த வீடியோக்கள் வெளியாகியுள்ளன. செனல் 4 இது குறித்த மேலும் பல வீடியோக்கள் தம்மிடம் இருப்பதாக அறிவித்திருப்பதுடன் அவற்றை போர் குற்ற விசாரணைகளுக்காக அனுப்பியிருப்பதாக அறிவித்துள்ளது.

கொல்லப்பட்ட பெண் இசைப்ரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார் 

இலங்கை இராணுவத்தினரால் பல பெண்கள் பாலியல் வல்லுறவு புரியப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது பற்றிய செய்திகள் பல வெளிவந்திருந்த போதும், அவற்றுக்கான ஆதாரங்கள் சிறிய அளவே இதுவரை திரட்டப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் பெண்ணொருவர் நிர்வாணமாக்கப்பட்டு சித்திரவதை புரியப்பட்டு கொலை செய்திருப்பதும், அதன் பின் பாலுறுப்புகள் பற்றி இலங்கை இராணுவத்தினர் கேலி செய்வதையும் அப்பட்டமாகப் பார்க்க முடிகிறது. ஒருவன் அப்பெண்ணின் மார்பகத்திலும் சுடும் படி கூட இருந்தபடி வலியுறுத்துவதையும் காண முடிகிறது.

SHARE