தமிழ், முஸ்லிம் சமூகம் தனித்து செயற்படுகின்றமையாலும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் எம் சமூகத்தை அடக்கப்பட்ட சமூகமாகவே கருதுகின்றனர்

115
தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஒன்றுசேர்ந்தால் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறலாம் என்ற சோபித தேரரின் கருத்தில் உண்மை இருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ், முஸ்லிம் மக்களும் உள்ளனர் என்று கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்போதே சுமந்திரன் எம்.பி. இவ்வாறுகூறினார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் அல்லது நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் சக்தி சிங்கள மக்களின் வாக்குகளில் மட்டுமே தங்கியுள்ளது. சிறுபான்மை மக்கள் அல்ல என்ற எண்ணக் கருவை மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளமையாலும் தமிழ், முஸ்லிம் சமூகம் தனித்து செயற்படுகின்றமையாலும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்கள் எம் சமூகத்தை அடக்கப்பட்ட சமூகமாகவே கருதுகின்றனர். எனினும், வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லிம்களும், மலையகத் தமிழர்களும் ஓரணியில் ஒன்று சேர்வோமாயின் இன்று நாங்களும் இந்த நாட்டின் தலைமையைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குவோம். பொது எதிரணியாக ஒன்று திரள முன்னர் எமது உரிமைகளையும் இப்போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதனையும் நாம் உணரவேண்டிய தேவை உள்ளது. எனவே, இப்போது நாங்கள் சரியான தீர்மானம் எடுப்பதன் மூலம் இலங்கையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் முடியும். இவை சாத்தியமாகுமாயின் சோபித தேரரின் கருத்து உண்மையாக மாறும்” என்றார்.
SHARE