பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தை சுற்றிலும், தடுப்பு போடுங்கள். மௌன புன்னகை புரிந்த ஜெயலலிதா: கடுப்பான கர்நாடக முதல்வர்

106
jeyalaitha_sithramaya_002
பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டுள்ளதால் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு கூடுதல் டென்ஷன் ஏற்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, மாநில உள்துறை ஆலோசகர் கெம்பய்யா, மாநில டி.ஜி.பி., பச்சாவ், பெங்களூரு நகர பொலிஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி உட்பட உயர் அதிகாரிகளை வரவழைத்து, அவர்களிடம் ஆலோசனை நடத்தி சில உத்தரவுகளை உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவுகள்

* தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளுங்கள்.

* பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றத்தை சுற்றிலும், தடுப்பு போடுங்கள்.

*கன்னட மண்ணில் ரத்தம் சிந்தக்கூடாது.

*நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்கு தெரியாது. சிறைக்குள் நடக்கக்கூடிய விடயங்களை கட்டுப்படுத்தி, வெளியில் நடக்கும் அசம்பாவிதங்களுக்கும் கடிவாளம் போட வேண்டும், இல்லாவிட்டால், காங்கிரஸ் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று முதல்வர் எச்சரித்து இருந்தார்.

ஒரு பக்கம், சட்டம், ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது. மற்றொரு பக்கம், ஜெயலலிதாவுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது. எனவே, புத்திசாலித்தனத்துடன் சூழ்நிலையை சமாளியுங்கள் என்று உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ஜெயலலிதா அம்மாநிலம் செய்ய விரும்பும் எந்த வித உதவிகளையும் ஏற்கமறுத்துவிட்டார்.

மைசூரிலிருந்து இடமாற்றப்பட்டு, பெங்களூரு வந்துள்ள சிறை அதிகாரி, ஜெயலலிதாவிடம், உங்களுக்கு ஏதாவது சிறப்பு வசதி தேவையா? எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள். முதல்வரே, உங்களிடம் நேரடியாக பேசுவார். உங்களை பாதுகாக்கும் பொறுப்பு என்னிடம் உள்ளது.

கர்நாடகா முதல்வர் சித்தராமையாவிடம், நீங்கள் ஏதாவது பேச விரும்புகிறீர்களா?’ என்று கேட்டபோது, ஜெயலலிதா எதையும் கூறாமல் சிரித்தபடி மௌனமாகி உள்ளார்.

ஜெயலலிதா எதையும் விரும்பவில்லை. இதுதான் தற்போது, சித்தராமையாவுக்கு டென்ஷனை ஏற்படுத்தியுள்ளது.

SHARE