தாயொருவருக்கு ஏற்பட்ட கோபத்தின் விபரீதம் – தெருவில் தவித்த பெண் பிள்ளை

59

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற தாயொருவர் தனது மகளை மறந்து விட்டு சென்ற சம்பவம் தம்புள்ளையில் பதிவாகியுள்ளது.

நேற்று மாலை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற தாய் ஒருவருக்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக கோபமடைந்தவர் தனது மகளை எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே விட்டு சென்றுள்ளார்.

குறித்த பெண் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகைத்தந்து அவருக்கு எரிபொருள் நிரப்ப வேண்டிய சந்தர்ப்பத்தில், பின்னால் வந்த முச்சக்கர வண்டி ஒன்று அவருக்கு முன்னால் நிறுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் நிலைய ஊழியர் இந்த பெண்ணுக்கு எரிபொருள் நிரப்பாமல், முன்னால் இருந்த முச்சக்கர வண்டிக்கு எரிப்பொருள் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த குறித்த பெண் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பும் போது அவருடன் வந்த மகளை மறந்து அவ்விடத்திலேயே விட்டு சென்றுள்ளார்.

சம்பவத்தில் பதற்றமடைந்த மகள் தாயாரின் மோட்டார் சைக்கிளின் பின்னாலேயே ஓடியுள்ளார். இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டு மேட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளனர். அதன் பின்னர் அவர் மகளை அழைத்து சென்றுள்ளார் என எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் அந்த எரிபொருள் நிலையத்தில் இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிசிரீவி காணொளியை காண இங்கே அழுத்தவும்
SHARE