20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவிடம் பாகிஸ்தான் தோல்வி

137

ஆஸ்திரேலியா– பாகிஸ்தான் அணிகள் 3 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் துபாய், சார்ஜாவில் நடக்கிறது.

இரு அணிகள் மோதிய ஒரே ஒரு 20 ஓவர் போட்டி நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நசீம் 25 ரன் எடுத்தார்.

கடைசி கட்ட பேட்ஸ்மேன்களான வகாப் ரியாஸ் 16 ரன்னும், ஹசன் 13 ரன்னும் எடுத்ததால் தான் பாகிஸ்தான் அணி 96 ரன் வரை எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் மேக்ஸ்வெல் 3 விக்கெட்டும், போய்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

97 ரன் இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 5 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் மேக்ஸ்வெல் (17 ரன்), சுமித் (3), ஹியூக்ஸ் (6) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

ஆனால் தொடக்க வீரரான டேவிட் வார்னர் நிலைத்து நின்று ஆடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். ஆஸ்திரேலியா 14 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 97 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டேவிட் வார்னர் 39 பந்தில் 53 ரன் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். 3 விக்கெட் வீழ்த்திய மேக்ஸ்வெல்லுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முதல் போட்டி நாளை நடக்கிறது.

SHARE