ஷிவாதாவை கலாய்க்கும் ரசிகர்கள் 

93‘நெடுஞ்சாலை’ படத்தில் ஆரியுடன் ஜோடி போட்டவர் ஷிவாதா. இவர் அடுத்து ‘அருவி’ என்ற படத்தில் நடிக்கிறார். இதுபற்றி பட இயக்குனர் நீலன் கூறியது:

நெடுஞ்சாலை படத்தில் ஹைவே சாலையின் ஓரம் ஓட்டல் நடத்தும் மலையாள பெண்ணாக நடித்து ரசிகர்களால் பேசப்பட்டவர் ஷிவாதா. அவர்தான் இப்பட ஹீரோயின். ‘ஷிவானி’ படத்தில் நடித்து வரும் சந்துரு ஹீரோவாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிஷோர் நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ஷிவாதாவை வெளியிடங்களில் பார்க்கும் ரசிகர்கள் அவரிடம் தோசை, ஆம்லெட் கேட்டு கலாய்ப்பதாக கூறினார். அருவி படம் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும். உயரத்திலிருந்து கொட்டும் அருவியின் அழகும், குளிர்ச்சியும் இக்கதையில் இருக்கும். சரவணன் கதை எழுதுகிறார். எம்.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ராஜேஷ்ராஜ் இசை அமைக்கிறார். கல்சன் மூவிஸ் தயாரிக்கிறது.ஏற்கனவே இந்நிறுவனம் ஜி.வி. பிரகாஷ் ஸ்ரீதிவ்யா நடிக்க மணி நாகராஜ் இயக்கத்தில் ‘பென்சில்’ படத்தை தயாரிக்கிறது, அதேபோல் நெடுஞ்சாலை கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி நடிக்கும் ‘மானே தேனே பேயே’ படத்தை தயாரிக்கிறது. இதன் படபிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது.

 

SHARE