அரியம் எம் பி பியசேனவைப் பார்த்து கீழ்சாதி, வாயைப் பொத்திக் கொண்டிரு உனக்கு தமிழ்களைப் பற்றித் தெரியாது வெறுமனே இலவச நீலத்துண்டினை கழுத்திலே போட்டுக்கொண்டு தமிழ்களைப் பற்றிக் கதைப்பதற்கு அருகதை அற்றவன்

121

பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழர்களது பூர்விக எல்லைக் கிராமங்களில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது என கூறியபோது அதற்கு இடையூறு விளைவித்த போதே பியசேனவைப் பார்த்தே கீழ்சாதியான் எனக்கூறி அவருடைய வாயை மூடவைத்த சம்பவம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்று உள்ளுராட்சி சட்டத்திருத்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதில் கலந்து கொண்ட அரியநேத்திரன் எம்.பி. மேற்கண்டவாறு திட்டியுள்ளார்.

பாராளுமன்றத்தில் பா.அரியநேத்திரன் உள்ளுராட்சி சட்ட திருத்த மூலம் தொடர்பாக தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பில் ஒரு வருடத்திற்கும் மேலாக தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது. அதில் ஒரு மாநகரசபையும் ஏழு பிரதேசசபையும் அதேபோன்று முல்லைத்தீவிலும் இரண்டு பிரதேசசபைகளில் 2011ம் ஆண்டு வேட்பு மனு தாக்கல் செய்தும் இதுவரைக்கும் தேர்தல் நடைபெறாமல் இருக்கின்றது.

இதனை நடத்தாமல் இருப்பதன் நோக்கம் தேர்தல் ஒன்று நடைபெறுமாக இருந்தால் நிச்சயமாக த.தே.கூட்டமைப்பு வெற்றிபெற்று விடும் என்ற நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை. ஆனால் அதன் பிற்பாடு மாகாணசபை தேர்தலை நடத்தியிருக்கின்றீர்கள்.

கல்முனையில் தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவினை தனியாகப் பிரித்துத் தருவதுடன் கல்முனை வடக்கிற்கென்று தனியான பிரதேச சபையையும் அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துதரவேண்டும்.

தற்போது பிரதேச எல்லைகள் என்று கூறுகின்ற போது மட்டக்களப்பில் இருக்கும் வெல்லாவெளி, பட்டிப்பளை, வாகரை போன்ற இடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது. இச்செய்பாடானது எதிர்வரும் காலங்களில் எங்களது எல்லைகளை மாற்றக்கூடியதாக அமைந்து விடும் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே பியசேன குறுக்கிட்டார்.

அரியநேத்திரன் கூறுவது பொய் என்றும் இவர் இனங்களுக்கிடையே இனவாதத்தினை ஏற்படுத்தும் கருத்துக்களை கூறுகின்றார் என்றும் பியசேன எம்.பி. கூறியுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட அரியம் எம் பி பியசேனவைப் பார்த்து கீழ்சாதி, வாயைப் பொத்திக் கொண்டிரு உனக்கு தமிழ்களைப் பற்றித் தெரியாது வெறுமனே இலவச நீலத்துண்டினை கழுத்திலே போட்டுக்கொண்டு தமிழ்களைப் பற்றிக் கதைப்பதற்கு அருகதை அற்றவன் என்று கூறினார்.

இதன்போது பாராளுமன்றத்தில் இருந்த ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர், அரியநேத்திரனைப் பார்த்து பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவரைப் பார்த்து கீழ்சாதி என்று கூறியதனை வாவஸ்பெற வேண்டும் என்று கூறியதற்கு அதனை வாபஸ் பெற முடியாது என அரியநேத்திரன் மறுத்து விட்டார்.

 

SHARE