ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் விலை குறைப்பு நிகழ்ச்சி நிரலில்- கோதுமை மாவின் விலை

126
ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்டு வரும் விலை குறைப்பு நிகழ்ச்சி நிரலில் அடுத்தாக கோதுமை மாவின் விலை குறைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை ஒன்று பிரிமா நிறுவனம் மற்றும் இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் பிரிதொரு நிறுவனத்துடன் நடத்தப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விலையை 20 வீதமாக குறைக்க இணங்க வேண்டுமாயின் தமது நிறுவனத்திற்கு வேறு வர்த்தக நடவடிக்கைகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பணிப்பாளர் ஒருவர் அரசாங்க தரப்பினரிடம் நிபந்தனையை   முன்வைத்துள்ளதாக  தெரியவருகின்றது?

இதனடிப்படையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து வறிய மக்களின் மனத்தை வெல்லும் வகையில் ஜனாதிபதியினால், கோதுமை மாவின் விலை குறைக்கப்படலாம்.

 

SHARE