தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவுப் போர் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது

462

 Balraj-in-preparations-for-Elephant-Pass-operation

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஆனையிறவுப் போர் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றது. இதன் முக்கியத்துவத்தை பரந்த, நீண்ட விடுதலைப் போரிலிருந்து தனிமைப்படுத்தியோ, ஆனையிறவு முகாம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கையாகக் (Operatino) குறுக்கியோ பார்க்க முடியாது. கொரில்லாப் போர் முறைக்கும், முழுமையான மரபுப் போர்முறைக்கும் இடைப்பட்டதான அரைமரபுப் போர்முறையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் மூலம், ஆணையிரவு இராணுவமுகாமை அகற்றுதலே விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரமாக உள்ளது.

விடுதலைப் போரின் வெற்றிக்காக ஆனையிறவு முகாம் விரைவில் அகற்றப்படவேண்டியது, விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரோபாயத் திட்டத்தில் மிக அவசியமான கட்டமாக இருக்கிறது. ஆனையிறவு முகாம், யாழ்ப்பாணக் குடாநாட்டையும், வடபகுதியின் ஏனைய பரந்த நிலப்பரப்புக்களையும், அடர்ந்து விரிந்த, கெரில்லாப் போராட்டத்திற்கு வசதியான பருவகால மழைக் காடுகளையும் இணைக்கின்ற இடத்தில் யாழ்ப்பாண ஏரியின் தென் கரையில் அமைந்துள்ளது. தரை மார்க்கமாக யாழ்ப்பாணக் குடாவையும், ஏனைய தமிழீழப் பகுதிகளையும் துண்டிக்கும் கேந்திர முக்கியத்துவம், ஆனையிறவு இராணுவ முகாமிற்கு உண்டு. தவிர, யாழ்குடாநாடு, முல்லைத்தீவு ஆகிய பிராந்தியங்களின்,கிழக்குக் கடற் பகுதிகளில் சிறிலங்கா கடற்படையானது நடமாட்டங்களையும், ரோந்துகளையும், விநியோகங்களையும், போர் நடவடிக்கைகளையும் புரிவதற்கும், விடுதலைப் புலிகளின் கடல் நடமாட்டத்தை உணவு, ஆயுத தளபாட, எரிபொருள் விநியோகங்களை, இந்தியாவுடனான கடல் செலவுகளைக் கண்காணிப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான, கடற்தளமாகவும் ஆனையிறவு முகாமின் விஸ்தரிப்பு விளங்கக் கூடியது. முன்னர் காலங்களில், சுங்கத்தடையாக இருந்த இம்முகாம், இந்திய இராணுவம் இருந்த காலத்தில் பலப்படுத்தப்பட்டும், பல நூறு யார்களுக்கு விஸ்தரிக்கப்பட்டும், கெலிமேடைகள் அமைக்கப்பட்டும் உறுதியான, நிரந்தர, வெற்றி கொள்ளக்கடினமான தளமாக நீண்டகாலக் கண்ணோட்டத்தில் அமைக்கப்பட்டது. இந்திய இராணுவ வெளியற்றத்தின் பின்னர் இம்முகாம் மேலும் பலப்படுத்தப்பட்டு, ஒரு பற்றாலியன் படையினரைக் கொண்டதாகவும், முன்னிலைக் காவலரண்களை, பங்கர்களை, கண்ணிவெடி வயல்களைக் கொண்டதாகவும், ஆக்கப்பட்டது. ஆனையிறவு முகாமை சுற்றியுள்ள பரந்த வெளிப்பகுதிகள் முகாமை நெருங்குவதற்கு கடினமான நில அமைப்பைக் கொடுத்தன. பனை மரங்களைக் கொண்ட வெளியான பகுதிகளும், பெரும்பாலான காலங்களில் வற்றிப்போய்க் கிடக்கும் கடல் ஏரிகளும், உப்பளங்களும், முகாமிலிருந்தும், விமானங்களில் இருந்தும் கண்காணிப்பதற்கும், தாக்குதல் செய்வதற்கும், வசதியை அளித்தன. அதேவேளை, முகாம் சுற்றி வளைக்கப்பட்டால் தென்பகுதியிலிருந்தும் ஏனைய வடக்குக் கிழக்கு இராணுவ தளங்களில் இருந்தும் உதவிப் படைகளை, உணவு, தளபாட விநியோகங்களைக் கடற்படையினர் கடல்மார்க்கமாக செய்வதற்கான அனுகூலத்தைக் கொண்டதாகவும் ஆனையிறவு முகாம் காணப்பட்டது.

ஆடி (யூலை) மாதம் ஆரம்பம் முதல் ஆனையிறவு முகாம் மீதான, முற்றுகை, இருக்கப்படவும், அதன் மீதான தாக்குதல் உக்கிரப்படுத்தப்படவும் செய்யப்பட்டது. மன்னார் சிலாபத்துறை முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது தரைப்படை, கடற்படை, ஆகாயப்படை ஆகியவற்றிற்கு எதிராக பரந்த வெளிகளில் நடைபெற்ற சண்டைகளின் போது பெற்ற அனுபவமும், தீடிர் பதுங்கு குழிகளை அமைத்துச் சண்டையிடுவதில் அடைந்த திறமையும் ஆனையிறவு முகாம் மீதான தாக்குதலுக்கு தூண்டிதலாக அமைந்தன. மேலும், விடுதலைப் புலிகள் அண்மையில், அதிநவீன விமான எதிர்ப்புப் பீரங்கிகளைக் கைவரப் பெற்றதும் ஒரு காரணம் எனலாம். ஆகாயத் தாக்குதல்களை நடத்துவதற்கும், தரைப்படைகளின் நர்வைப் பாதுகாத்து உதவுவதற்கும்,காயம் பட்டவர்களை அகற்றுவதற்கும், விநியோகங்களுக்கும், புதிய உதவிப்படைகளை விரைவாக கொண்டுவந்து குவிப்பதற்கும் ஹெலிக்கொப்டர்களும் விமானங்களும் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதுவரை காலமும் (1991 ஆவணி மாதம் எழுதப்பட்டது வரலாற்றுடன் தேசக்காற்று இணையம் பதிவு செய்கிறது) 2000,3000 அடி உயரத்திற்குச் சுடக்கூடிய 50 கலிபர் துப்பாக்கிகளை பயன்படுத்திய விடுதலைப் புலிகள், 7000 அடி வரை சுடக்கூடியதும், தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் பல் துப்பாக்கிகள் இயக்கக் கூடியதுமான பீரங்கி வகைகளைப் பெற்றதும் ஆனையிறவு முகாம் தாக்குதலுக்கு உந்துதலை அளித்த காரணமாக இருந்துள்ளது. வன்னிச் சண்டையின் போது விழுத்தப்பட்ட 2 ஹெலிகள், அப்பகுதியில் போரின் போக்கை மாற்றியது குறிப்பிடத் தக்கது.

நூற்றுக் கணக்கில் அருள் ரைபிள் கிரனைட்டுகளையும், பசிலன் 5000 மோட்டார்களையும் ரொக்கட் ஏவும் கிரனைட்டுகளையும் முகாமுக்குள் செலுத்தி, முகாமைச் சின்னாபின்னமாக்கிய விடுதலைப் புலிகள், படிப்படியாக முகாமைச் சுற்றி வளைத்து, நெருங்கத் தொடங்கினர். தீடிர்ப் பதுங்கு குழிகளை அமைத்தும், மரங்களின் பின்னால் நிலை எடுத்துப் போரிட்டும் முன்னேறினர். கண்ணிவெடி வயல்களைக் கடப்பதற்காக, கவசவாகனங்களாக மாற்றம் செய்யப்பட்ட புல்டோசர்களையும், உழவு இயந்திரங்களையும், பெங்களூர் டோபிடோ என்ற நீலக் குழாய்க் குண்டுகளையும் பயன்படுத்தினர். முகாமிற்குள் விநியோகங்களை வீசவோ, முகாமிற்குள் இறந்த, காயப்பட்டவர்களை அகற்றவோ முடியாது ஹெலிக்கொப்டர்கள் திணறின. 5000 அடிக்கு மேலயே ஹெலிக்கொப்டர்களும், விமானங்களும் பறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வளவு உயரத்தில் இருந்தவாறு சுடுதலோ, குண்டுகளை வீசுதலோ, சாத்தியமான காரியமாகப்படவில்லை. தரைப்படைக்கு உதவுவதற்காக அதி உயரத்தில் இருந்து இறங்கி வந்த விமானங்களும், ஹெலிக்கொப்டர்கள் கடும் தாக்குதல்களுக்கு உலாகின. 2 ஹெலிக்கொப்டர்களும், 1 ஆகாயபப்டை விமானமும், மோசமான காயங்களுக்கு உலாகியோ, செதமாக்கப்பட்டோ விரட்டியடிக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் முகாமிலிருந்து 200 யார் தூரத்திற்கு நெருங்கி வந்திட்ட வேளையில், தரைமார்கமானதும், ஆகாயமார்க்கமானதுமான உதவி கிடைக்காத நிலையில் கடல்வழி ஆன மார்க்கத்தை அதிகூடியளவு பயன்படுத்த சிறீலங்கா அரசின் ஆயுதப்படைத் தலைமைப்பீடம் தீர்மானித்தது.

8000 க்கும் மேற்பட்ட படையினர், ஆனையிறவிலிருந்து 8 கி.மீற்றர் தொலைவிலுள்ள, யாழ் குடாநாட்டின் கிழக்குக் கரையிலுள்ள வெற்றிலைக்கேணியில் தரை இறக்கப்பட்டனர். போர்க் கப்பல்கள், பீரங்கிப் படகுகள், வேகப்படகுகள், வள்ளங்கள், டிங்கிகள் என்று 50க்கு மேற்பட்ட கடற்படைக் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த இராணுவ நடவடிக்கை பலவேகய என்று பயரிடப்பட்டு மேஜர் ஜெனரல் டென்ஸில் கொபேக்கடுவவின் தலைமையில் ஒப்புவிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக, யாழ்ப்பாண தளபதியான விஜயா விமலரத்னா அனுப்பப்பட்டார். கவசவாகனங்கள், பவல் வாகனங்கள், பீரங்கிகள், ட்ரக் வண்டிகள், உழவு இயந்திரங்கள் என்று பலவகை கனரக வாகனங்களும் இறக்கப்பட்டன. ஆனையிறவின் விழ்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதை உணர்ந்த அரசாங்கம், அதனை எப்பாடுபட்டாயினும் உடனடியாக தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. விடுதலைப் புலிகளின் விடுதலைப் போர்முறைத் திட்டம், வடபகுதி முழுவதையும் முதலில் விடுதலை செய்யப்பட்ட பிரதேசமாக்கி அங்கு தமது நிலையை உறுதிப்படுத்திய பின்னர் படிப்படியாக கிழக்கு பகுதியை மீட்டெடுத்தல் என்போதாக காணப்பட்டது. விடுவிக்கப்பட்ட வடபகுதி, சிறந்த அடித்தளமேடையாக கருதப்பட்டது. எனவே இச்சண்டை, ஒரு முகாமிற்கு எதிரான சண்டை என்ற நிலையிலிருந்து, முழு அளவிலான போர் என்ற பரிமாணத்தை எடுத்தது. அதிகூடிய இராணுவ எண்ணிக்கை பலம், போர்க்கருவிகள் பலம், கூடிய வெடிமருந்து சக்தி (Fire Power) ஆகியன மூலம் ஆணையிரவு முகாமின் வீழ்ச்சியை தடுக்க அரசாங்கம் முனைந்தது.

இப்பாரிய படை எடுப்பை எதிர்கொள்ள விடுதலைப் புலிகள் முடிவு செய்தனர் அதேவேளை, 800க்கு மேற்பட்ட இராணுவத்தினரை உள்ளடக்கியும், கடந்த சில, மாதங்களாக ஆயுதங்களாலும், வெடிமருந்துகளாலும், உணவுப் பொருட்களாலும் நிரப்பப்பட்டும், கனரக வாகனங்களையும், பீரங்கிகளையும் உடையதாயும், நன்கு அரண் இடப்பட்டும் இருந்த ஆனையிறவு முகாமைக் கைப்பற்றி, புளிக்கொடியினை ஏற்ற விடுதலைப் புலித் தலைமைப்பீடம், 4000க்கு மேற்பட்ட விடுதலை வீரர்களை அங்கு குவித்தது. சிறீலங்கா அரசாங்கம் திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம், கொழும்பு, குடாநாடு ஆகியவற்றிலிருந்து உதவிப் படைகளைப் பிறரது போல், விடுதலைப் புலிகளும், உதவிப் படைகளை பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைத்தனர். விடுதலைப் புலிகளின் ஆன், பெண் பிரிவினர் வீராவேசமாக பேரிட்டனர். கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களும், பெருந்தொகையாகக் குவிக்கப்பட்ட இராணுவத்தினரிடை நடாத்தப்பட்டு, பாரதூரமான அழிவுகளை ஏற்படுத்தின. மேஜர் பால்ராஜின் (பிரிகேடியர் பார்ராஜ்) தலைமையில், ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் நடாத்தப்பட்டது. தளபதி பால்ராஜ் அதிநுட்பமான போர்த் தந்திரோபாயங்களை வகுத்து, அவற்றைத் திறம்பட நடத்தி முடிப்பவர் என்று பேர் எடுத்தவர். அதேவேளை, கடற்கரையில் தரையிறக்கப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையும், பல்வேறு தலைமைகளின் கீழ் நடாத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் விசேட கொமாண்டோப் பிரிவினர், மேஜர் சொர்ணத்தின் (பிரிகேடியர் சொர்ணம்) தலைமையில், இராணுவ விசேடப் பணிக்கான கொமாண்டோக்களோடு, கடற்கரையில் மோதி, பல தடவைகள் இராணுவப் பலத்தை அழித்து பின்வாங்கி ஓடச் செய்தனர். விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக, 8000க்கு மேற்பட்ட படையினரின் நகர்தல், இராணுவ அதிகாரிகள் வர்ணித்தது போல அங்குலம் அங்குலமாகவேirunthathu. கண்ணிவெடியில் சிக்கி பலர் கால்களை இழந்தனர். ஸ்னைப்பர் தாக்குதலில் பலர் இறந்து போயினர். நேரடி மோதல்களின் விளைவாக நூற்றுக்கணக்கானோர் கொல்லபப்ட்டனர். 1000க்கு மேற்பட்ட இராணுவத்தினர், ஆனையிறவு முகாமிற்கு உள்ளேயும், கடற்கரைப் பகுதியிலும் கொலையுண்டனர். பல அதிகாரிகள் பலியானார். அதேயளவு தொகையினர் படுகாயம் அடைந்தரன். கொழும்பு வைத்தியசாலைகள் நிரம்பி வழிந்தன. 100க்கு மேற்பட்ட அம்புலஸ் வாகனங்கள் அவசர சேவைக்கு அமர்த்தப்பட்டன. 10ம் திகதி (10.07.1991) ஆரம்பித்த இந்தப் பாரிய இராணுவ நடவடிக்கையின் போது, 24 நாட்களின் பின்னர் அரசபடைகள் முகாமின் கிழக்குப் பகுதியை உடைத்து உள்நுழைந்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது. “அவர்கள் உள்நுழைந்தது ஆனையிறவு முகாமுக்குள் அல்ல; தங்களது சவச்சாலைக்குள்” என்று விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இதனை வர்ணித்துள்ளார். அங்கு சுற்றிவளைப்பில் அகப்பட்டிருக்கும்800 இராணுவத்தினரை மீட்பதற்காக அல்ல; இவர்களும் அப்போரிக்குள் அகப்படுவதற்காகவே சென்றுள்ளனர். “சிறீலங்க அரசின், இராணுவ சாகாசம் பெரும் அழிவில் முடியப் போகின்றது” எனவும் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆனையிறவு முகாமின் கிழக்குப் பகுதி முற்றுகையை விடுதலைப் புலிகள் தளர்த்தியது. உத்திரீதியான தந்திர நகர்வு என்றே கருதவேண்டும். முகாமின் தெற்கு, வடக்கு, மேற்குப் புறங்களில் முகாமின் வெளிப்புறத்தில், நேருக்கு நேரான கைகலப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கடும் சண்டைகள் நடைபெறுகின்றன. இதுவரை விடுதலைப் புலிகளின் தரப்பில் 400க்கு மேற்பட்டோர் களத்தில் வீரமரம் அடைந்துள்ளனர். இன்னும் ஹெலிக்கொப்டர்கள் இறங்க்கமுடியவில்லை. சிறிலங்காவின் 8000 இராணுவத்தினரும் மீண்டும் பெரும் அழிவுகளுடன் வந்தவழியே வெற்றிகரமாக பின்வாங்க வேண்டும். அல்லது போனால் பொறிக்குள் அகப்பட்ட எலிகளைப் போல் அங்கே முழுவதுமாக அழிக்கப்படுவர். அல்லது சரண் அடைய வேண்டும் ஒரே மார்க்கமான கடல் வழிப் பாதையைத் தடைசெய்வதற்கும், கடற்படையினரோடு மோதுவதற்கும் கடற்புலிகளின் பெரும் அணி கிழக்குக் கடர்கரையோரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விநியோகத் தொடர்மீது தாக்குதல்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், உதவிப் படைகளோ, விநியோகங்க்களோ, தடைசெய்யப்பட்ட நிலையில், ஆனையிறவு முகாமின் வீழ்ச்சியோ, அங்கு அகப்பட்டிருக்கும் இராணுவத்தினர் அழிக்கப்படுவதோ நிச்சயமாயினும், எப்போது என்பதே கேள்விக்குறியாக உள்ளது. விடுதலைப் புலிகளின் பேச்சாளர் குறிப்பிட்டது போல் ஆணியிரவுக்கான சண்டை முடியவில்லை; இது எமது மண்ணில் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் முடிவுக்கான ஆரம்பமாகும்.

TPN NEWS

SHARE