இணையத்தளப் பாதுகாப்பு தொடர்பில் சீனாவுடன் இலங்கை ஒப்பந்தம்

68

இலங்கையின் இணையத்தள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

இலங்கை தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை மற்றும் சீனாவின் இணையத்தள துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான அவசர வினையாற்றல் குழுவினர் தமது அரசாங்கங்களின் சார்பில் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் இணையத்தளப் பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் இணையத்தளப் பாவனையைக் கட்டுப்படுத்தல் போன்ற நடவடிக்கைகளில் சீனாவின் உதவியைப் பெற்றுக் கொள்ள இலங்கை எதிர்பார்த்துள்ளது.

மேலும் இலங்கை அரசின் முக்கிய இணையத்தளங்களை சைபர் தாக்குதலிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் சீனா ஏற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில இலங்கையருக்கு சீனா மேலதிக பயிற்சிகளை வழங்கவும் இணக்கம் தெரிவித்துள்ளது.

 

SHARE