ரணில் விக்கிரமசிங்க, ஐரோப்பாவில் புலிகளைச் சந்தித்தார்: பரபரப்புச் செய்தி-

105

ranil-ltteரணில் விக்கிரமசிங்க தனது ஐரோப்பிய விஜயத்தின் போது விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியதாக அரச ஊடகத்தில் பரபரப்புச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய சிலுமிண பத்திரிகை , விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தூண்டுகோலாக இருந்த எதிர்க்கட்சி அரசியல்வாதி யார்,என்ற தலைப்பில் மேற்குறித்த விபரங்களை உள்ளடக்கி பிரதான செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியில் ரணிலுடன் ஐரோப்பாவில் வாழும் நான்கு இலங்கையர்கள் ஒன்றாக நிற்கும் புகைப்படமொன்றும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் காணப்படும் நபர்கள் ஐரோப்பாவில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கும் ,ரணிலின் ஐரோப்பிய விஜயத்துக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக சிலுமிண செய்தி குறிப்பிடுகின்றது.

எனினும் சிலுமிண செய்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் காணப்படும் நபர்கள் நால்வரும் சிங்களவர்கள் என்பது சுயாதீன தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

அவர்கள் நால்வரும் லண்டனில் ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை முக்கியஸ்தர்கள் என்றும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலுமின பத்திரிகையிடம் இழப்பீடு கோரவுள்ள ரணில்

அரசாங்கத்தின் வார செய்தி இதழாலான சிலுமின பத்திரிகையிடம் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வழக்கு தாக்கல் செய்ய தீர்மானத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அண்மையில் லண்டன் நகருக்கு விஜயம் செய்திருந்த போது அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்தித்ததாக சிலுமின பத்திரிகையில் வெளியான செய்தி மற்றும் வெளியிடப்பட்ட புகைப்படம் தொடர்பாக இந்த வழக்கை தாக்கல் செய்யுமாறு ரணில், ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் 500 மில்லியன் இழப்பீடு கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

அத்துடன் 2 மில்லியன் பவுண்களை கோரியும், இங்கிலாந்தில் சிலுமின பத்திரிகைக்கு தடை விதிக்குமாறும் கோரி வேறு ஒரு வழக்கு லண்டனில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இன்று வெளியான சிலுமின பத்திரிகையில் புலிகளின் தடை நீக்கத்தின் பின்னணயில் இருக்கும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதி யார் என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

<pரி. சந்திரசேகர=”” என்பவர்=”” எழுதியுள்ள=”” இந்த=”” செய்திக்கு=”” கீழே=”” புகைப்படம்=”” ஒன்று=”” வெளியிடப்பட்டுள்ளதுடன்=”” லண்டனில்=”” ரணில்,=”” புலம்பெயர்=”” புலிகளுடன்=”” பேச்சுவார்த்தை=”” என=”” அதில்=”” குறிப்பிடப்பட்டுள்ளது.<=”” p=””>எனினும் அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் லண்டன் கிளையில் அதிகாரிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் இருப்பவர்கள் அனைவரும் சிங்களவர்கள்,ஐக்கிய தேசியக் கட்சியின் லண்டன் கிளையின் நிறைவேற்று குழு உறுப்பினர் இந்திக குமார, கிளையின் செயலாளர் தர்ஷன டேனியல், கட்சியின் இளைஞர் முன்னணியின் லண்டன் கிளை பொருளாளர் ரொஷான் சமந்த யாப்பா, லண்டன் கிளையின் தலைவர் ஹர்ஷன கன்னங்கர ஆகியோர் முறையே இந்த புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.

 

SHARE