நான் மாடலிங்கில் இருந்தபோது, ப்ரியங்கா சோப்ரா தான் எனக்கு நண்பராக இருந்தார்..

113

பாலிவுட்டின் ஹாட் அண்ட் செக்ஸி நடிகைகள் தீபிகா படுகோனேவும், ப்ரியங்கா சோப்ராவும். இவர்கள் இருவரும் இப்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் பஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடிக்க இருக்கின்றனர். அரச கதையான இப்படத்தில் ரன்வீர் சிங் ஹீரோவாக நடிக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ப்ரியங்கா சோப்ரா பங்கேற்று நடித்து வருகிறார். தீபிகா படுகோனே விரைவில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் பாலிவுட்டில் நீண்டகாலமாக தீபிகாவுக்கும், ப்ரியங்கா சோப்ராவுக்கும் இடையே முட்டல் மோதல் இருப்பதாக ஒரு செய்தி வெளிவந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளார் தீபிகா.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பாலிவுட்டின் அருமையான நடிகை ப்ரியங்கா சோப்ரா, அவர் எனது நண்பரும் கூட, அவருடன் நான் சேர்ந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே பிரச்னை என்ற செய்தி, என் காதுகளுக்கும் எட்டியது. ஆனால் எங்களுக்குள் அப்படி எதுவும் கிடையாது. மேலும் நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ப்ரியங்கா சோப்ரா எனது நண்பர். நான் மாடலிங்கில் இருந்தபோது, ப்ரியங்கா சோப்ரா அப்பவே டாப் நடிகையாக இருந்தார், எனக்கு யாருமே இல்லாத போது ப்ரியங்கா சோப்ரா தான் நண்பராக இருந்தார். அப்போது நான் அவரது வீட்டிற்கு எல்லாம் சென்றுள்ளேன் என்று கூறியுள்ளார்.

 

SHARE