நவம்பர் 27இல் பிரபாகரன் மாவீரர் தின உரையாற்றுவாரா?

78

Prabakaran10.img_assist_customநவம்பர் 27 தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் தினமாகும். யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்கள் கடக்கவிருக்கும் நிலையில் பிரபாகரன் மாவீரர் தின உரையினை ஆற்றுவாரா என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்படவில்லை. அவர் அங்கிருக்கிறார் இங்கிருக்கிறார் என பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்தன. நிலைமை இவ்வாறிருக்க மாவீரர் தினம் நடைபெறுவதற்கு முன்பதாகவே யார் யார் மாவீரர் தினம் கொண்டாடப்போகின்றார்கள் என்கின்ற தகவல்களை இப்பொழுதிலிருந்தே இராணுவப்புலனாய்வாளர்கள் திரட்டிவருகின்றனர். இந்நாட்டிற்காக உயிர்த்தியாகங்களை மேற்கொண்ட மாவீரர்களது நினைவுகளை அனுஷ்டிப்பதற்கு இலங்கையரசாங்கம் தடைசெய்திருக்கும் அதேநேரம் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களின் நினைவு தினங்களை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நிலைமை இவ்வாறிருப்பினும். நவம்பர் 27 மாவீரர் தினம் இலங்கையில் மட்டுமல்ல உலகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. மக்கள் மனதில் இன்றைக்கும் பிரபாகரன் என்றோ ஒருநாள் மாவீரர் தினத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

SHARE