ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்

152
சில தினங்களுக்கு முன்னர் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஸ்மார்ட் கடிகாரம் ஒன்றினை அறிமுகம் செய்தது.இதன்மூலம் ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு போட்டியாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் இணைந்துள்ளது.

200 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரமானது 1.4 அங்குல அளவு மற்றும் 320 x 106 Pixel Resolution ஆகியவற்றினைக் கொண்ட திரையினைக் கொண்டுள்ளது.

மேலும் இதயத்துடிப்பினை அறிந்து கொள்ளும் தொழில்நுட்பம், GPS தொழில்நுட்பம், Bluetooth 4.0 ஆகியவற்றுடன் iOS, Android மற்றும் Windows இயங்குதளங்களைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளுடன் இணைத்து பயன்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது.

SHARE