முரளிதரனை வம்பிழுக்கும் முகமது யூசுப்

116
தற்போது இருக்கும் சர்வதேச விதிகளுக்கு ஏற்றவாறு அப்போது முத்தையா முரளிதரன் பந்து வீசவில்லை என பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் குற்றம் சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றிற்கு பாகிஸ்தான் முன்னாள் அணித்தலைவர் முகமது யூசுப் பேட்டியளித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முரளிதரன சிறந்த ஒரு கிரிக்கெட்டை விளையாடவில்லை என குற்றம் சாட்டிய யூசுப் இதுபற்றி கூறுகையில், முன்பு இருந்த சர்வதேச விதியால் அவர் 15 டிகிரிக்கு கையை உயர்த்தி பந்து வீசுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.

ஆனால் இப்போது உள்ள விதிமுறைகள் எல்லாம் வேறு. நான் அவருடன் ஓவ்வொரு முறையும் விளையாடும் போது அவர் அனைத்து பந்தையும் 15 டிகிரியை தாண்டி தான் வீசுவார்.

அப்போது நான் என் மனதுக்குள் நினைத்துக் கொள்வேன் முரளிதரன் கிரிக்கெட் விளையாடுவதில் அதிர்ஷ்டசாலி என்று, ஆனால் தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியம் கொண்டு வந்திருக்கும் விதிமுறைகள் வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.

SHARE