விமான நிலையங்களில் அதிகரிக்கப்போகும் ஸ்கேன்னர்கள்

108
ஜேர்மனி விமான நிலையங்களில் முழு உடலையும் ஸ்கேன் செய்யும் சர்ச்சைக்குரிய இயந்திரங்கள் இனி எதிர்காலத்தில் அமைக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜேர்மனியில் தற்போது பெர்லின், ஹாம்பர்க், ஸ்டட்கர்ட், முனிச் போன்ற 6 விமான நிலையங்களில் 14 ஸ்கேன்னர் இயந்திரங்கள் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், ஜேர்மனி விமான நிலையங்களில் இந்தாண்டின் இறுதிக்குள் இன்னும் 14 இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றும் மேலும் வரும் ஆண்டுகளில் இன்னும் 75 ஸ்கேன்னர்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலோகம் கண்டறியும் மெட்டல் கண்டக்டர்களை போல் அல்லாமல், இந்த ஸ்கேன்னர்கள் திரவம், தூள் மற்றும் மற்ற சாத்தியமான அனைத்து ஆபத்தான பொருட்களை கண்டறியும் திறன் பெற்றது என தெரிவித்துள்ளனர்.

ஆனால், பலர் ஸ்கேன்னர்கள் தனியுரிமையில் ஊடுருவுவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

SHARE