நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பூஜை’ படம் மூலம் நடிக்க வந்த ஸ்ருதி…

86

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘பூஜை’ படம் மூலம் நடிக்க வந்த ஸ்ருதிஹாசனுக்கு அந்தப் படம் மிகப் பெரிய பெயரை வாங்கித் தரவில்லை. இருந்தாலும் படத்தில் ஸ்ருதிஹாசனின் கிளாமரான தோற்றம் அவரைப் பற்றி கொஞ்சம் பேச வைத்திருக்கிறது. தெலுங்கில் நடிக்கும் படங்களில் எல்லாம் அதிகமான கிளாமராக நடித்த ஸ்ருதி, தமிழில் அந்த அளவிற்கு கிளாமராக நடிக்கவில்லை என்கிறார்கள். சமீபத்தில் ‘பூஜை’ பட பத்திரிகையாளர் சந்திப்பில் கூட கிளாமர்னா என்ன எனக் கேள்வி கேட்டு திடுக்கிட வைத்தார்.கிளாமருக்கு என்ன அளவுகோல் என்பதை அவருக்கு யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும் என்று கூட அன்று கமெண்ட் அடித்தார்கள். இதனிடையே சமீபத்திய பேட்டி ஒன்றில், “நான் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கேற்ப என் எல்லை என்ன என்பது எனக்குத் தெரியும். அப்படி நடிக்கும் போது அது அனைவரையும் விரும்ப வைப்பதாகச் செய்கிறது. என் லட்சியத்தை அடைய நான் எப்போதும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறேன். என் திறமை மீதே நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என் படத்தை நீங்கள் பார்க்க விரும்பினால் பாருங்கள், பிடிக்கவில்லை என்றால் என் படங்களைப் பார்க்க வேண்டாம், ” எனச் சொல்லியிருக்கிறார்.
இரண்டு வாரங்களுக்குள் கிளாமரின் எல்லை என்ன என்பதை ஸ்ருதிஹாசனுக்கு யாரோ புரிய வைத்திருக்கிறார்கள். அன்று கிளாமர் என்றால் என்ன என்று கேட்டவர், இன்று எனக்கு என் எல்லை என்ன என்பது தெரியும் என மாற்றிப் பேசியிருக்கிறார்.

 

 

SHARE