உலக நாயகன் இந்திய தமிழ் சினிமாவின் தவப்புதல்வன்!

90

செல்லுலாய்ட் கண்டுபிடிக்கப்பட்டவுடனே அதை எப்படி கையாள்வது என்று யாருக்கும் தெரியவில்லை, அதனால் 21ம் நூற்றாண்டுகளுக்கு முன் மக்களின் குறை தீர்க்க கடவுள் இறை தூதுவனை மண்ணிற்கு அனுப்பியது போல், செல்லுலாய்ட் உலகத்தை ஆட்சி செய்ய கலையுலக கடவுளாக பரமகுடியில் பிறந்தார் இந்த கலைஞானி.

குழந்தை மனம் மாறாமல், கொஞ்சும் தமிழுடன் களத்தூர் கண்ணமாவில் அறிமுகமாகி எம்.ஜி.ஆர், சிவாஜி மார்பில் தூங்கி சரோஜாதேவி மடியில் விழித்து எழுந்த தவப்புதல்வன் நீ. உன்னை வார்த்தைகளால் அலங்கரிக்க தமிழில் வார்த்தைகளே இல்லை.

தமிழ் சினிமாவின் ஐன்ஸ்டின், கிராகம்பெல், நியுட்டன் எல்லாமே நீ தான். ஆம் இந்திய சினிமாவே டெக்னாலஜி என்ற வார்த்தையை டிஸ்னரியில் தேடிக்கொண்டிருந்த நேரம், எளிதாக நீ வந்து உன் பத்து விரல்களிலும் பத்து விதமான டெக்னாலஜிகளை பாய்ச்சினாய் தமிழ் சினிமாவில்.

உலக சினிமாவே பேசத்தொடங்கிய காலத்தில் பேசாமலேயே பேசும் படம் எடுத்து உன்னை பற்றி புறம் பேசியவர்களை பேச விடாமல் செய்தாய். மாயஜாலம் என்றால் புராணகதைகளில் படித்து வந்த நேரம் முதன் முதலாக கிராபிக்ஸ் என்ற தொழில் நுட்பத்தை இந்திய திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்திவைத்த குரு நீ.

அதே சமயம் தமிழ் சினிமாவில் காலம் காலமாக தொன்று தொட்டு நிற்கும் செண்டிமெண்டுகளை வன்முறையாக அறுவடை செய்தாய். ஆனால் அன்பு தான் சிறந்தது என அன்பே சிவமாக மாறினாய். ஹே ராம் நீ நல்ல நடிகன் தான்யா.

உன் இமையில் சிக்கிய சிவப்பு ரோஜாக்கள் பற்றி எங்களுக்கு தெரியாது, ஆனால் எங்களை இமை மூடாமல் பார்க்க வைக்கிறது உன் சாதனைகள். இந்திய சினிமாவே எதிர்ப்பார்ப்பது உங்களுக்கு எப்போது ஆஸ்கர் கிடைக்கும் என்று. ஆனால் நாங்கள் காத்திருப்பது ஆஸ்கருக்கு எப்போது கமல்ஹாசன் விருது கிடைக்கும் என்று.

நீங்கள் கடவுளா? மிருகமா? என்று தெரியாது ஆனால் தமிழ் சினிமாவை எப்போதும் நீங்கள் ஆளவந்தவர் என்று மட்டும் தெரியும். நீங்கள் நல்லவரா? கெட்டவரா? என்று தெரியாது ஆனால் உலகமே வியந்து நோக்கும் ஈடு இணையில்லா நாயகன் என்று தெரியும்.

நீ வாங்கிய விருதுகளை எண்ணி முடிக்க உலகத்தை சுற்றி வரும் நேரம் ஆகும், அதேசமயம் நீ ஏற்ற கதாபாத்திரங்களை எண்ண ஆரம்பித்தால் அந்த உலகமே தலை சுற்றி கீழே விழுந்து விடும்.

களத்தூர் கண்ணாமாவில் பாலகனாக அறிமுகமான நீ உன் 16 வயதினேலே பல சவால்களை கடந்து கலைஞனாக மட்டுமின்றி தமிழ் மக்கள் மனதில் புன்னகை மன்னனாக வலம் வந்தவர் நீங்கள். உன்னை போல் ஒருவன் இந்த பூமியில் பிறக்க போவது இல்லை, உன் விஸ்வரூபத்தை வெல்ல போவதும் இல்லை.

இந்திய சினிமாவிலேயே ஏன்? உலக சினிமாவிலேயே திரைத்துறையில் தொடர்ந்து 50 ஆண்டுகளுக்கு மேல் நடித்து அதில் வெற்றி பவனி வரும் ஒரே கலைஞன் நீ மட்டும் தான். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என சினிமாவில் நீ பேசாத மொழிகளே இல்லை.

உங்களை வாழ்த்துவதற்கு நாங்கள் தசவதாரம் எடுத்தால் தான் முடியும், ஆனால் அதற்குள் நீங்கள் 100 அவதாரத்தை எடுத்து விடுவிற்களே. அதனால் தற்போது சொல்லி கொள்கிறோம் ‘உலகம் வியக்கும் உலக நாயகனுக்கு ‘சினி உலகத்தின்’ பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

 

SHARE