இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்-மேத்யூஸ்

133
 

இந்திய அணி வீரர்கள் எங்களை விட எல்லா வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள் என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.

இலங்கை அணி இந்தியா சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவிய இலங்கை அணி, 2வது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் தோல்வியடைந்தது.

இந்த தோல்வி பற்றி இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறுகையில், முதலாவது ஒருநாள் போட்டியில் அவர்கள் எங்களை துவம்சம் செய்தார்கள். இதே போன்று இங்கும் அடித்து நொறுக்கி விட்டார்கள்.

நாங்கள் 40 முதல் 50 ஓட்டங்கள் வரை குறைவாக எடுத்து விட்டோம். 300க்கும் மேலான ஓட்டங்கள் குவித்திருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு மாதிரி இருந்திருக்கும். எஞ்சிய போட்டிகளில் நாங்கள் எழுச்சி பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.

SHARE