நடிகை பத்மபிரியாவின் திடீர் திருமணம்

83

‘தவமாய் தவமிருந்து’, ‘பட்டியல்’, ‘சத்தம் போடாதே’, ‘மிருகம்’, ‘பொக்கிஷம்’ உள்ளிட்ட பல்வேறு தமிழ்ப் படங்களில் நடித்திருப்பவர் பத்மபிரியா.

தொடர்ந்து சில படங்களில் நடித்த பத்மபிரியாவுக்கு தமிழில் பட வாய்ப்பு குறைந்ததையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்தினார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்நிலையில் பத்மபிரியாவுக்கும் குஜராத்தை சேர்ந்த ஜாஸ்மின் என்பவருக்கும் மும்பையில் நேற்று திருமணம் நடந்தது.

பெற்றோர் சம்மதத்துடன் நடைபெற்ற இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் யாரையும் அழைக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு பொது நிர்வாகவியலில் மேற்படிப்பு படிக்கப் போன பத்மப்ரியா, அங்குதான் ஜாஸ்மினை முதலில் சந்தித்தாராம்.

நட்பில் ஆரம்பித்த இவர்களது உறவு காதலாக மாறி தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. திருமணத்திற்கு பின்பு நடிப்பதா, இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை என்று பத்மபிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மபிரியா தமிழில் கடைசியாக நடித்த படம் “தங்கமீன்கள்” என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE