சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா

97
கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்து அசத்தினார்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் இதற்கு முன்பு சச்சின், ஷேவாக் வரிசையில் இரட்டை சதம் அடித்து இருந்தார்.

தற்போது சர்வதேச அரங்கில் 2 முறை இரட்டை சதம் அடித்தவர் என்ற சாதனையை செய்துள்ளார். அது மட்டுமல்லாது இந்த போட்டியில் 264 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் 219 ஓட்டங்கள் எடுத்திருந்த ஷேவாக்கின் உலக சாதனையை தகர்த்துள்ளார்.

SHARE