அர்ஜென்டினா வெற்றி

109
குரோஷியாவுக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அர்ஜென்டினா, குரோஷியா அணிகளுக்கு இடையிலான சர்வதேச நட்பு கால்பந்து போட்டி லண்டனில் நேற்று நடந்தது.

ஆட்டத்தின் 11வது நிமிடத்தில் குரோஷியாவின் ஷார்பினி முதல் கோல் அடித்தார். இதற்கு அர்ஜென்டினா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் குரோஷியா 1–0 என முன்னிலை வகித்தது.

பின், இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட அர்ஜென்டினாவுக்கு அன்சால்டி (49வது நிமிடம்), லியோனல் மெஸ்சி (57வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர்.

கடைசி நிமிடம் வரை போராடிய குரோஷிய வீரர்களால் கூடுதலாக கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் அர்ஜென்டினா அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

SHARE