இங்கிலாந்து கோர்ட்டில் இந்திய டாக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிவு..!!

இங்கிலாந்தின் பிர்மிங்காம் அருகே உள்ள ஹார்போர்ன் நகரில் வசித்து வருபவர் விபோர் குப்தா (வயது 52). இந்திய வம்சாவளி டாக்டரான இவர் பிர்மிங்காமில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த மார்ச் மாதம் விபோர் குப்தா கைது செய்யப்பட்டார்.

இவர் மீது பிர்மிங்காம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று 3 பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது. இவர் வருகிற 21-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த தகவலை மேற்கு மிட்லாந்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

About Thinappuyal News