பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதியின் மகளின் பணியை மாற்றிய ஏர் இந்தியா நிறுவனம்..!!

பாதுகாப்பு காரணங்களுக்காக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகளின் விமானப் பணிப்பெண் பணி மாற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மகளான சுவாதி, ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் தனது தந்தை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரும் தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார். ஏர் இந்தியா விமானத்தின் நீண்ட தூர விமானங்களான போயிங் 787, போயிங் 777 ஆகியவற்றில் விமான பணிப்பெண்ணாக இருந்து வந்தார்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஜனாதிபதியின் மகள் என்ற முறையில் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். அவருடன் எப்பொழுதும் பாதுகாவலர்கள் இருக்க வேண்டும். ஆனால், பாதுகாவலர்கள் அவருடன் விமானத்தில் பயணிக்க முடியாது என்பதால் அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் நீடித்து வந்தது.

இதையடுத்து அவரது பணியை ஏர் இந்தியா நிர்வாகம் மாற்றியுள்ளது. டெல்லியில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவன தலைமையகத்தில் அவருக்கு ஒருங்கிணைப்பு பிரிவில் பணி வழங்கப்பட்டுள்ளது.

About Thinappuyal News