அரசாங்கம் தருகின்றது என்பதற்காக அரசியல் தீர்வை ஏற்க மாட்டோம் முதல்வர் விக்னேஸ்வரன்..!!

 

அரசாங்கம் தருகின்றது என்பதற்காக குறைபாடுகளுடனான அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டால், அது வருங்கால சந்ததியினருக்கு பாராதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டார்.தமிழ் மக்களினுடைய தனித்துவ சுய உரித்தை மழுங்கச் செய்து பெரும்பான்மையினத்தவர் சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இந் நாட்டின் முழுமையான ஆட்சி உரித்தையும் கையகப்படுத்திக் கொண்டனர். அதுமட்டுமன்றி, தற்போது வடக்கு மாகாணத்தில் மக்கள் செரிவை மாற்றியமைப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறைபாடுகளுடனான தீர்வை ஒருபோதும் ஏற்க முடியாதென முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது எமது கோரிக்கைகளை வலுவுடனும் திடமுடனும் எடுத்துக் கூற வேண்டிய கடப்பாடு உண்டென மேலும் தெரிவித்தார்.இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமைமையுடையவர்களை, குறிப்பாக படித்த இளைஞர் யுவதிகளை வேட்பாளர்களாக உள்வாங்க வேண்டுமென்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முதல்வர் விக்கி தலைமையில் தமிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம்த மிழ் மக்கள் பேரவையின் விசேட கூட்டம் ஒன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் விதம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.மிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக பதிவு செய்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதா அல்லது புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடுவதா என்பது குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் எதிர்கால நலனுக்காக உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையை எந்த வகையிலும் அரசியல் கட்சியாக மாற்றப்படாது எனவும் அரசியல் நடவடிக்கைகளின் போது பேரவை என்ற வகையில் தலையீடுகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

About Thinappuyal News