ஜேர்மனியில் அறிமுகமாக உள்ள அதிநவீன ரயில்..!!

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரயிலை ஜேர்மனியின் Deutsche ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.

“Idea Train” என்னும் பெயரிடப்பட்டுள்ள இந்த ரயிலில் இரைச்சலை குறைக்கும் நாற்காலிகள், உடற்பயிற்சி கூடம், உடற்பயிற்சி பயிற்சியாளர், விளையாடுவதற்கு என பிரத்யேக இடங்கள், தொலைக்காட்சி பெட்டி என பல வகையான சிறப்பு அம்சங்கள் உள்ளன.

இந்த அதிநவீன தொழில்நுட்ப விரைவு ரயில், தானியங்கி கார்களுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

பயணிகளின் பயண நேரத்தினை பயனுள்ள வகையிலும், பொழுதுபோக்காக கழிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயிலில், தாங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பயணிகள் சிறந்த அனுபவத்தை பெறுவர் என நம்பப்படுகிறது.