இந்திய உணவை சாப்பிட்டு, கனடாவில் நிர்வாணமாக திரிந்த இளம்பெண்கள் கைது..!!

கனடாவில் இளம்பெண்கள் உள்பட 5 பேர் இந்திய உணவை சாப்பிட்ட போதையில் நிர்வாணமாக பல அட்டூழியங்களில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் நகருக்கு அருகில் பெற்றோர் இருவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து திரும்பிய நபர் ஒருவர் தனது தோழியுடன் இவர்களது வீட்டிற்கு சென்றுள்ளார்.

தந்தையை தவிர்த்து மற்ற நால்வரும் காலை உணவை அருந்தியுள்ளனர்.

அப்போது, இந்தியாவில் இருந்து கொண்டு வந்த உணவை வாலிபர் மற்றவர்களுக்கு கொடுத்துள்ளனர்.

உணவை சாப்பிட்ட அனைவருக்கும் மயக்கம் போன்ற ஒருவித போதை தலைக்கேறியதாக கூறப்படுகிறது.

உடனடியாக தங்களது ஆடைகளை நீக்கிவிட்டு நிர்வாணமாக அனைவரும் ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டவாறு வெளியே வந்துள்ளனர்.

பின்னர், அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்து தம்பதி இருவர் மற்றும் அவர்களுடைய குழந்தையை கடத்திக்கொண்டு தங்களது பி.எம்.டபள்யூ காரில் வேகமாக சென்றுள்ளனர்.

ஆனால், கட்டுப்பாட்டை இழந்த கார் லொறி மீது மோதி நின்றுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, அனைவரும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் விரைந்து சென்று குழந்தையையும் தம்பதியையும் மீட்டனர்.

பின்னர், நிர்வாண நிலையில் இருந்த மற்ற நால்வரையும் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Thinappuyal News