13வயது பிரிவுக்குட்பட்ட வவுனியா மாவட்ட துடுப்பாட்ட அணித்தெரிவு..!!

வவுனியா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 13வயது பிரிவுக்குட்பட்ட மாவட்ட மட்ட துடுப்பாட்ட அணித் தெரிவானது இன்று 12/11/2017தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மட்ட பயிற்சியாளர் தலைமையில் வடதாரகை வலைப்பந்து பயிற்சிக் கூடத்தில் இத்தெரிவு இடம்பெற்றது.

இத் தெரிவுக்காக மாவட்ட மட்டத்தில் துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், கோவில்குளம் இந்துக் கல்லூரி, செட்டிக்குளம் மகா வித்தியாலயம், புதுக்குளம் மகா வித்தியாலயம், பூவரசங்குளம் மகா வித்தியாலயம், நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம், விபுலானந்தா கல்லூரி, மடுக்கந்தை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளிலிருந்து 50 மேற்பட்ட மாணவர்கள் வருகைதந்திருந்தனர் இதில் 20 பேர் கொண்ட மாவட்ட அணி தெரிவு செய்யப்பட்டது .

 

 

 

About Thinappuyal News