கை, கால்கள் இல்லாத இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிப்பு பதற வைக்கும் சம்பவம்..!!

கனடா நாட்டில் காணமல்போன இளம்பெண்ணின் உடல் தலை, கை, கால்கள் இல்லாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள ஓண்டாரியோ மாகாணத்தில் Rori Hache(22) என்ற இளம்பெண் பெறோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ம் திகதி இளம்பெண் திடீரென காணாமல் போய்விட்டதாக பெற்றோர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரை பெற்ற பொலிசார் பல்வேறு இடங்களில் தேடுதல் வேடையை நடத்தியுள்ளனர்.

சில நாட்களுக்கு பின்னர் செப்டம்பர் 11-ம் திகதி ஓண்டாரியோ ஆற்றில் தலை, கைகள், கால்கள் இல்லாமல் ஒரு இளம்பெண்ணின் உடல் மிதந்து வந்துள்ளது.

உடலை மீட்ட பொலிசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

டி.என்.ஏவை சேகரித்த பொலிசார் அதனை காணாமல் போன இளம்பெண்ணுடன் ஒப்பிட்டு பார்த்தபோது அது அவர் தான் என உறுதி செய்யப்பட்டது.

இத்தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக பெற்றோர்களிடம் தெரிவித்தபோது அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

‘எவ்வித விவகாரத்திலும் ஈடுப்படாத தங்களது அன்பு மகளை துண்டு துண்டாக வெட்டியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்’ என பொலிசாரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

இளம்பெண் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரை பற்றி தகவல் அறிந்தவர்கள் உடனடியாக பொலிசாரை தொடர்புக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

About Thinappuyal News