இரணைமடு நிரம்பி வழிகிறது ..!!

வட மாகாணத்தில் நிலவும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி இரணைமடு குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக கிளிநொச்சி நீர்பாசன திணைக்கள காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18.5 அடிகளில் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடுக் குளத்தில் இதுவரை 36 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் அரைவாசிக்கும் மேல் நீர்மட்டம் நிரம்பியுள்ளது.

கடந்த காலங்களில் நிலவிய வறட்சி காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 7 அடியாக குறைந்திருந்தது.

குளத்தின் நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமகா கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்கள் பெரும்போக பயிர்ச்செய்கைக்கு தயாராகி வருகின்றனர்.

About Thinappuyal News