வவுனியாவில் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை..!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குட்பட்ட மகாறம்பைக்குளம் காந்தி வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பருவமாழை தொடங்கியுள்ள காரணத்தால் வீதியில் நீர் நிரம்பிவிடுவதாகவும் மக்கள் பயணம் செய்ய பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

இந்த வீதியானது கடந்த 20 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமல் இருக்கிறது. ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழையின் காரணமாக வீதியானது பாதிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசாங்க அதிகாரிகளிடம் மற்றும் அரசியல்வாதிகளிடம் முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட போதிலும் எந்தவொரு பலனும் கிடைக்கவில்லை.
150 குடும்பங்களைச்சேர்ந்த 500 பேருக்கு மேல் இவ்வீதியை பயன்படுத்தி வரவதாகவும் மழை காலங்களில் இரண்டு அடிக்கு அதிகமாக நீர் வீதியில் பாய்ந்து ஓடுவதால் பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள், வயோதிபர்கள், நோயளர்கள் என பலரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே உரிய அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ் வீதியை திருத்தி தருமாறு மக்கள் ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 

 

About Thinappuyal News