ரோஹிங்யா அகதிகள் விவகாரம்  அரம்பேபொல ரத்னசார தேரருக்கு பிணை..!

சிங்கள ஜாதிக்க பலவேகவின் செயலாளர் அரம்பேபொல ரத்னசார தேரருக்கு இன்று பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கல்கிசைப் பிரதேசத்தில் மியன்மார் ரோஹிங்யா அகதிகளை தங்க வைத்திருந்த வீட்டுக்கு முன்பாக கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்று கல்கிசை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.