பிரபல பாடலாசிரியர் பிரேமகீர்த்தி டி அல்விஸை நினைவுக்கூரும் முகமாக நேற்று கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் இடம்பெற்ற ”சந்த கென் வெடிலா (நிலவின் ஒளிக்கீற்றில்)” இசை நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்குபற்றினார்.

விக்டர் ரத்நாயக்க, சுனில் எதிரிசிங்க, டீ.எம். ஜயரத்ன மற்றும் பிரியா சூரியசேன உள்ளிட்ட பிரபல பாடகர்கள் அமரர் பிரேமகீர்த்தி டி அல்விஸினால் இயற்றப்பட்ட பாடல்களைப் பாடி நிகழ்வை சிறப்பித்தனர்.

பிரேமகீர்த்தி டி அல்விஸினால் எழுதப்பட்ட “நொசெலென் இந்திரபீலய சே (நிலையான கோபுரங்கள்)” மற்றும் “அன்தீமயா (இறுதியானவன்)” எனும் காவிய நூல்களும் நிர்மலா டி அல்விஸினால் அமரர் பிரேமகீர்த்தியைப் பற்றி எழுதப்பட்ட “பிரேமகீர்த்தி” எனும் நூலும் இதன்போது நிர்மலா டி அல்விஸினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, கொழும்பு நாலந்தா கல்லூரியின் அதிபர் திலக் வத்துஹேவா மற்றும் கலைஞர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.