வவுனியா ஏ9 வீதியில் 02 கிலோ கஞ்சா மீட்பு சாரதி கைது. 

 

வவுனியா ஏ9 வீதியில் 02 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த கயஸ் வாகனத்தில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவே கைப்பற்றப்பட்டுள்ளது.

கனகராயன்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பிந்து தலைமையிலான குழுவினரே கயஸ் வாகனத்தை வழிமறித்து சேதனை நடத்தியபோது மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை மீட்டுள்ளனர்.

இதன்போது வாகன சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

 

About Thinappuyal News