கிளிநொச்சியில் கழிவு துணிகளால் பொது மக்களுக்கு அசௌகரியம் அகற்றுவதற்கு கால அவகாசம்..!

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியாா் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழ்கின்ற பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாக கவலை தெரிவித்துள்ளனா்.

ஆடைத் தொழிற்சாலையின் கழிவு துணிகளை தனிநபா் ஒருவா் கொள்வனவு செய்து அதனை மூலப்பொருளாக பயன்படுத்தி சிறு தொழில் முயற்சி ஒன்றில் ஈடுப்பட்டு வருகின்றாா். அவா் தான் கொள்வுனவு செய்யும் கழிவு துணிகளை தனது காணியில் வெட்ட வெளியில் களஞ்சியப்படுத்தியுள்ளாா். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பெருமளவு கழிவு துணிகள் இவ்வாறு குப்பை மேடு போன்று காணப்பட்டு வருகிறது.

அத்தோடு அண்மையில் பெய்து கடும் மழை காரணமாக மேற்படி கழிவு துணிகள் நனைந்ததோடு மட்டுமன்றி அருகில் உள்ள கழிவு வாய்க்கால் நீரில் அடித்துச் செல்லப்பட்டு சுற்றயல் பிரதேசங்களில் சிதறிக் காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர் கேடுகள் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விடயம் பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவரால் நீதிமன்றத்தின் நடவடிக்கை முற்படுத்தப்பட்டு நீதி மன்றம் குறித்த நபருக்கு மூன்று வார காலம் அவகாசம் வழங்கியிருக்கின்றது.

 

 

 

About Thinappuyal News