எனது அரச அதிகாரிகள் கூட பழிவாங்கப்படுகின்றனர்- மஹிந்த..!

தற்போதைய அரசாங்கம், தனது காலத்தில் இருந்த அரசாங்க அதிகாரிகளைக் கூட பழிவாங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத்தை சந்திக்க மஹிந்த இன்று வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக 4 பில்லியன் ரூபாய் பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், காமினி செனரத் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thinappuyal News