வவுனியாவில் சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம்..!

சர்வதேச நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

சுகாதார திணைக்களத்தின் தொற்றா நோய்கள் தடுப்பு பிரிவின் ஏற்பாட்டில் பொறுப்பு வைத்திய அதிகாரி திருமதி சுதர்சினி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் ஆரம்பத்தில் வவுனியா மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்களுக்கு நீரிழிவு நோய் தொடர்பான பரிசோதனைகள் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், தாதியக்கல்லூரி மாணவர்கள் உள்ளடங்கலாக வவுனியா மவாட்ட அரசாங்க அதிபரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு ஊர்வலம் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி நகர் வழியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையை சென்றடைந்திருந்தது.

இதேவேளை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு அரசாங்க மருத்துவர் சங்கத்தின் வவுனியா கிளையினரும் அனுசரணை வழங்கியிருந்தனர்.

 

 

 

About Thinappuyal News